கத்திரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய்
  • தேங்காய்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • சாம்பார் தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • உப்பு
  • கடலைப்பருப்பு
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

300 கிராம் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

1/4 கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக 1/4 கப் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post