பானி பூரி மசாலா கிழங்கு

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • சுண்டல்
  • கொத்தமல்லி இலை
  • பெரிய வெங்காயம்
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • சீரகத்தூள்
  • உப்பு

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

அதனுடன், 50 கிராம் வேகவைத்த சுண்டல், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post