பேல் பூரி குழம்பு

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பச்சை பட்டாணி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பூண்டு
  • சோம்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • கடலை மாவு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை
  • புதினா
  • உப்பு
  • கருவேப்பிலை

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கு, 100 கிராம் ஊற வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வேக வைத்து மசிக்கவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, நான்கு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கருவேப்பிலை இலை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மசாலா கொதிக்க ஆரம்பித்த உடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் கடலைமாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும் மற்றும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக மசித்து வைத்துள்ள கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post