தேவையான பொருட்கள்
- மைதா
- கோதுமை மாவு
- ரவை
- உப்பு
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா, ஒரு கப் கோதுமை மாவு, 1/2 கப் ரவை, 1/2 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் சமையல் சோடா, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை இரண்டு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
