மரவள்ளி கிழங்கு பாயாசம்

தேவையான பொருட்கள்

  • மரவள்ளி கிழங்கு
  • பால்
  • வெல்லம்
  • முந்திரி
  • ஏலக்காய்
  • உலர் திராட்சை
  • நெய்

செய்முறை

கடாயில், ஒரு கப் தோல் நீக்கி துருவிய மரவள்ளி கிழங்கு மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின், நெய்யில் வறுத்த மரவள்ளி கிழங்கு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

ஒரு கப் பால் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post