தேவையான பொருட்கள்
- மைதா
- கோதுமை மாவு
- சர்க்கரை
- சமையல் சோடா
- ரவை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா, 1/2 கப் கோதுமை மாவு, ஒரு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் சமையல் சோடா, இரண்டு ஸ்பூன் ரவை, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.
பின், ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சர்க்கரை மற்றும் 250 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய பூரிகளாக எண்ணெயில் போட்டு பொரித்து அதனை காய்ச்சி வைத்துள்ள பாகில் போட்டு எடுக்கவும்.
