பால் பன்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • தயிர்
  • பால்
  • சர்க்கரை
  • சமையல் சோடா
  • எண்ணெய்

செய்முறை

முதலில் 200 கிராம் மைதா, 1/2 ஸ்பூன் சமையல் சோடா, 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனுடன் 1 கப் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சர்க்கரை மற்றும் 250 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சிறிதளவு தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகில் போட்டு எடுக்கவும்.

Previous Post Next Post