முட்டை லாலிபாப்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • உப்பு
  • அரிசி மாவு
  • பிரட் க்ரம்ஸ்
  • எண்ணெய்

செய்முறை

முதலில், நான்கு முட்டையை வேகவைத்து துருவி கொள்ளவும்.

பின், அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

சிறிய உருண்டைகளாக பிடித்து முட்டையில் போட்டு பின் பிரட் க்ரம்ஸ் தூவி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post