தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- பெரிய வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
500 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 25 மில்லி எண்ணெய் சேர்த்து, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பூண்டு, சிறிதளவு கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
