பிரட் கட்லெட்

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • கறி மசாலா தூள்
  • பிரட் க்ரம்ஸ்
  • சோள மாவு

செய்முறை

பத்து பிரட் துண்டுகள் எடுத்து அதன் நான்கு புறமும் வெட்டி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு மூன்று, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிரட்டை சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு தேய்த்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை நீளமான உருண்டைகளாக பிடித்து பிரட் வைத்து நன்கு மூடி பின்னர் சோள மாவை தண்ணீரில் கலந்து அதன் மேல் தடவி பிரட் க்ரம்ஸ் தூவி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post