ஜவ்வரிசி லட்டு

தேவையான பொருட்கள்

  • ஜவ்வரிசி
  • சர்க்கரை
  • நெய்
  • ஏலக்காய் பொடி
  • கேசரி பவுடர்
  • முந்திரி

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் ஜவ்வரிசி மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

ஜவ்வரிசி வெந்த பின் தண்ணீரை வடிகட்டி விடவும்.

ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 1/4 கப் முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும். பின்னர், அதே கடாயில் வேக வைத்துள்ள ஜவ்வரிசி, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு இறுகி வரும் வரை நன்கு கிளறி விடவும்.

இறுதியாக, 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

Previous Post Next Post