தேவையான பொருட்கள்
- பால்
- எலுமிச்சை
- சர்க்கரை
- முந்திரி
- பாதாம் பருப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் பொங்கி வரும் பொழுது பாதி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடவும்.
பால் நன்கு திரிந்து வந்த பிறகு பாலில் உள்ள நீரை ஒரு வெள்ளை துணியில் வைத்து வடிகட்டி. பின், நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை தட்டிச் சேர்க்கவும். இதனை ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் பால், தேவையான அளவு சர்க்கரை, 1/4 கப் துருவிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர், வேக வைத்துள்ள ரசமலாயை தயார் செய்து வைத்துள்ள பாலில் சேர்க்கவும்.
