தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- பூஸ்ட்
- மைதா
- சர்க்கரை
- முந்திரி
- எண்ணெய்
- நெய்
செய்முறை
இரண்டு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
இதனுடன் நெய்யில் வறுத்த 1/4 கப் மைதா, 1/2 கப் கொக்கோ பவுடர், 50 கிராம் பூஸ்ட், 25 மில்லி எண்ணெய் சேர்த்து நன்கு இறுகும் வரை கலந்து விடவும்.
இறுதியாக, 25 மில்லி நெய் சேர்த்து இறக்கவும். இதனை ஒரு தட்டில் ஊற்றி பொடியாக்கிய முந்திரியை மேலே தூக்கி விட்டு நன்கு ஆற வைத்து பின் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
