ரசகுல்லா

தேவையான பொருட்கள்

  • பால்
  • எலுமிச்சை பழம்
  • சர்க்கரை

செய்முறை

பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் கொதிக்க தொடங்கியவுடன் மூன்று ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பால் திரிந்தவுடன் ஒரு துணியில் ஊற்றி பிரிந்த நீரை வடிகட்டி எடுத்து விட்டு நன்கு பிசையவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர், 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தயார் செய்து வைத்துள்ள ரசகுல்லா உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

Previous Post Next Post