தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய்
செய்முறை
ஒரு கப் உளுந்து பருப்பை நன்கு வறுத்து அரைக்கவும்.
பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து பருப்பை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, இரண்டு ஏலக்காயை தட்டி சேர்க்கவும்.
