மத்தி மீன் தொக்கு


தேவையான பொருட்கள்

  • மத்தி மீன்
  • புளி
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • நல்லெண்ணெய்
  • சோம்பு
  • வெந்தயம்
  • கடுகு
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

1/2 கப் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

200 கிராம் மத்தி மீன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post