சோயா பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள்

  • சோயா பீன்ஸ்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா‌ தூள்
  • மட்டன் மசாலா பொடி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • கடுகு
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு தக்காளி, இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 100 கிராம் சோயா பீன்ஸ் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

பின், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post