தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- அரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- உப்பு
- எண்ணெய்
- சீரகம்
- அவல்
செய்முறை
ஒரு கப் அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய மரவள்ளி கிழங்கு ஒரு கப், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் அவல் சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்து வைத்துள்ள மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் வைக்கவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
