மரவள்ளி கிழங்கு வடை

தேவையான பொருட்கள்

  • மரவள்ளி கிழங்கு
  • உளுந்து பருப்பு
  • வெந்தயம்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • சோம்பு
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் உளுந்து பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய மரவள்ளி கிழங்கு ஒரு கப், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இதனுடன் இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post