தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- கீரை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலை மாவு
- இஞ்சி
- சோம்பு
- பூண்டு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவுடன் ஒரு பெரிய வெங்காயம், ஒரு கப் கீரை, இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை உருண்டையாக பிடித்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
