முருங்கைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய்
  • சின்ன வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கடுகு
  • கடலைப்பருப்பு
  • வெந்தயம்
  • புளி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், மற்றொரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதனுடன், ஒரு கப் பொடியாக நறுக்கி முருங்கைக்காய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/2 கப் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post