தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய்
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- மிளகாய் தூள்
- சாம்பார் பொடி
- தேங்காய்
- நல்லெண்ணெய்
- கடலைப்பருப்பு
- கடுகு
- உளுந்து பருப்பு
- உப்பு
- மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு சிறிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இரண்டு கப் பொடியாக நறுக்கிய முருங்கைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
இறுதியாக, 1/2 கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
