தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- பாசிப்பருப்பு
- கடுகு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- எண்ணெய்
- உப்பு
- சாதம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர், ஒரு கப் சாதம் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
