சேனைக்கிழங்கு சில்லி

தேவையான பொருட்கள்

  • சேனைக்கிழங்கு
  • கடலை மாவு
  • சோள மாவு
  • மைதா
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • கறி மசாலா தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எலுமிச்சை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

250 கிராம் சேனைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து எடுக்கவும்.

பின், வேக வைத்துள்ள கிழங்குடன் நான்கு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு, நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.

தயார் செய்து வைத்துள்ள சேனைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post