உருளைக்கிழங்கு போண்டா

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • மிளகாய் தூள்
  • பெருங்காயத்தூள்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து ஆறியபின் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்து மாவில் போட்டு பின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post