வெண்டைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய்
  • தேங்காய்
  • பெரிய வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • சாம்பார் மசாலா தூள்
  • உப்பு
  • கடலைப்பருப்பு
  • கடுகு
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் 200 கிராம் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி சேர்க்கவும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

Previous Post Next Post