பாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • புளி
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • தேங்காய்
  • பூண்டு
  • காய்ந்த மிளகாய்
  • சாம்பார் பொடி
  • மிளகாய் தூள்
  • வெல்லம்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் 50 கிராம் சின்ன வெங்காயம், நான்கு பல் பூண்டு, ஒரு தக்காளி மற்றும் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும். ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

பின், ஒரு கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

200 கிராம் பொடியாக நறுக்கிய பாகற்காய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

1/2 கப் புளிக்கரைசல் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post