தேவையான பொருட்கள்
- பாகற்காய்
- பெரிய வெங்காயம்
- கடலைப்பருப்பு
- தக்காளி
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் பொடியாக நறுக்கிய 300 கிராம் பாகற்காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வறுக்கவும்.
மற்றொரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு சிறிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் தயார் செய்து வைத்துள்ள பாகற்காய், தேவையான அளவு உப்பு, 1 டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
