ஆப்பிள் தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் தக்காளி
  • பூண்டு
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • கடலைப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின், பொடியாக நறுக்கிய ஆப்பிள் தக்காளி மூன்று கப், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

இறுதியாக சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். இது சப்பாத்திக்கு உகந்தது.

Previous Post Next Post