ஆட்டுக்குடல் கிரேவி


தேவையான பொருட்கள்

  • ஆட்டுக்குடல்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • தனியா தூள்
  • சீரகம்
  • சோம்பு
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • தேங்காய்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • மட்டன் மசாலா தூள்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு குக்கரில் 200 கிராம் பொடியாக வெட்டிய ஆட்டுக்குடலை நன்கு சுத்தம் செய்துவிட்டு சேர்த்து அதனுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, பத்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.‌ இறுதியாக இரண்டு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து ஆற வைத்து 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஐந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் ஒரு சிறிய தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர், வேக வைத்துள்ள குடலை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து கிளறவும். பின், அரைத்து வைத்துள்ள மசாலா, 1 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post