தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- தேங்காய்
- பொட்டுக்கடலை
- சோம்பு
- பட்டை
- கல்பாசி
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- தக்காளி
- கடுகு
- எண்ணெய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
1/2 கப் துருவிய தேங்காய், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, சிறிதளவு கல்பாசி, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் வேக வைத்து மசித்த மரவள்ளி கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
