சிக்கன் பப்ஸ்

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • மைதா
  • பெரிய வெங்காயம்
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • மட்டன் மசாலா பொடி
  • மிளகாய் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • மிளகுத்தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • சமையல் சோடா
  • கறிவேப்பிலை

செய்முறை

ஒரு கப் மைதா, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.

ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், பொடியாக நறுக்கிய சிக்கன் ஒரு கப், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை, அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து அகலமாக தேய்த்து நான்கு ஸ்பூன் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி எண்ணெயில் போட்டு பொரிக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post