தேவையான பொருட்கள்
- மைதா
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- தேங்காய்
- எண்ணெய்
- சமையல் சோடா
செய்முறை
ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் மைதா, 1/2 கப் துருவிய தேங்காய், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 250 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள மாவை குழம்பு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரிக்கவும்.
