முட்டை பப்ஸ்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மைதா
  • பெரிய வெங்காயம்
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • மிளகாய் தூள்
  • சமையல் சோடா
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை

முதலில், தேவையான அளவு முட்டையை வேக வைத்து எடுக்கவும்.

ஒரு கப் மைதா, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.

ஒரு கடாயில், 25 மில்லி எண்ணெய், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து அகலமாக தேய்த்து இரண்டு ஸ்பூன் தயார் செய்து வைத்துள்ள மசாலா, ஒரு முட்டையை இரண்டாக வெட்டி பாதி முட்டையை வைத்து, பின் நான்கு புறமும் நன்கு மூடி எண்ணெயில் போட்டு பொரிக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post