தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி
- தேங்காய் பால்
- பச்சை பட்டாணி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- புதினா
- இஞ்சி-பூண்டு விழுது
- பட்டை
- சோம்பு
- லவங்கம்
- ஏலக்காய்
- தயிர்
- எலுமிச்சை
- சிக்கன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- எண்ணெய்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், ஒரு ஏலக்காய், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
பின், மூன்று தக்காளி, இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதனுடன் 1/2 கப் பச்சை பட்டாணி, நான்கு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
இரண்டு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும் மேலும், இரண்டு டம்ளர் தேங்காய் பால், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
