தேவையான பொருட்கள்
- மட்டன்
- பிரியாணி அரிசி
- தேங்காய் பால்
- தயிர்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- புதினா
- கொத்தமல்லி இலை
- சோம்பு
- மட்டன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- இஞ்சி-பூண்டு விழுது
- பட்டை
- லவங்கம்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
குக்கரில், 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
பின், 250 கிராம் எலும்பு நீக்கிய மட்டன், நான்கு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன் இரண்டு கப் பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும், மேலும் இரண்டு டம்ளர் தேங்காய் பால், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு விசில் விடவும்.
