வெஜ் புலாவ்

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சோம்பு
  • பட்டை
  • லவங்கம்
  • கல்பாசி
  • பிரியாணி இலை
  • ஏலக்காய்
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • நெய்

செய்முறை

குக்கரில், 25 மில்லி நெய் சேர்த்து நெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஏலக்காய், பட்டை, லவங்கம், கல்பாசி, பிரியாணி இலை, இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.

இரண்டு டம்ளர் பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். இதனுடன், மூன்று டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மெதுவாக வைத்து ஒரு விசில் விடவும்.

Previous Post Next Post