தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- கடலை மாவு
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சாம்பார் பொடி
- மிளகாய் தூள்
- சோம்பு
- கடுகு
- எண்ணெய்
- உப்பு
- மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் பாசிப்பருப்பை பாதி அளவிற்கு வேகவைக்கவும்.
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சோம்பு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் கடலைமாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும் (தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).
கொதிக்க ஆரம்பித்த உடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்க்கவும். இந்தக் குருமா இட்லி, தோசைக்கு உகந்தது.
