தேவையான பொருட்கள்
- மைதா
- சர்க்கரை
- சமையல் சோடா
- எள்
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் மைதா, பொடியாக்கிய சர்க்கரை ஒரு கப், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, நான்கு ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் எள் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
