உக்காரை

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு
  • ரவை
  • வெல்லம்
  • நெய்
  • ஏலக்காய் பொடி
  • முந்திரி
  • தேங்காய்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் பாசிப்பருப்பை வறுத்து வேக வைக்கவும்.உக்காரை

ஒரு கப் வெல்லம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

கடாயில், 25 மில்லி நெய், 1/4 கப் ரவை சேர்த்து வறுக்கவும். இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

வேக வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து இறுகி வரும் வரை கிளறி விடவும். பின்னர், தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகு சேர்த்து கலந்து விடவும்.

25 மில்லி எண்ணெய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பாகு இறுகும் வரை கிளறவும்.

1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post