வாழைப்பூ பாசிப்பருப்பு சாம்பார்

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ
  • பாசிப்பருப்பு
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சாம்பார் பொடி
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

1/2 கப் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

பின்னர், 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதனுடன், வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவைப்பட்டால் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post