வாழைப்பூ சாம்பார்

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ
  • துவரம் பருப்பு
  • சீரகம்
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சாம்பார் பொடி
  • சின்ன வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

1/2 கப் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், பத்து சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனுடன், வேக வைத்துள்ள துவரம் பருப்பை தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும், தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கத் தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post