தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- கருப்பட்டி
- சமையல் சோடா
- எண்ணெய்
- எள்
செய்முறை
200 கிராம் கருப்பட்டியை நன்கு தட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
200 கிராம் கோதுமை மாவு, கொதிக்க வைத்துள்ள கருப்பட்டி, 1/2 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் எள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிரித்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
