தேவையான பொருட்கள்
- பால்
- அரிசி மாவு
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- முந்திரி
- உப்பு
செய்முறை
ஒரு கப் பச்சரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து பிசையவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின், வேக வைத்துள்ள உருண்டைகள் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, 1/4 கப் முந்திரி, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
