முட்டைக்கோஸ் பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி
  • முட்டைக்கோஸ்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • புதினா
  • தயிர்
  • பிரியாணி மசாலா பொடி
  • சிக்கன் மசாலா பொடி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சோம்பு
  • ஏலக்காய்
  • பட்டை
  • இலவங்கம்
  • உப்பு
  • எண்ணெய்
  • நெய்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு இலவங்கம், ஒரு ஏலக்காய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். பின், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இதனுடன் இரண்டு டம்ளர் அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும் மேலும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

Previous Post Next Post