உருளைக்கிழங்கு சில்லி

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • கடலை மாவு
  • சோள மாவு
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • சில்லி பொடி
  • எலுமிச்சை
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு சிறிய மெல்லிசான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இதனுடன், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சில்லி பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.‌

பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post