தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- சாதம்
செய்முறை
முதலில், இரண்டு பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும்.
பின், கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, பொரித்து வைத்துள்ள பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர், ஒரு கப் சாதம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
