தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- தேங்காய்
- வெல்லம்
- முந்திரி
- ஏலக்காய்
- மைதா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் பாசிப்பருப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்துள்ள பாசிப்பருப்பில் இருந்து தண்ணீரை வடித்து எடுத்து விடவும்.
ஒரு கடாயில், 1/2 கப் பொடியாக்கிய வெல்லம், ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் முந்திரி சேர்த்து சூடாக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்க்கவும். இரண்டு ஏலக்காயை தட்டி சேர்க்கவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு கப் மைதா, ஒரு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது மாவில் போட்டு எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
