தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • காஷ்மீரி மிளகாய் தூள்
  • புளி
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில், பொடியாக நறுக்கிய 1/2 கிலோ தக்காளி, 10 காய்ந்த மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி, நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், நன்கு ஆற வைத்து அரைக்கவும்.

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், வறுத்து பொடியாக்கிய வெந்தயம் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், பத்து பல் பூண்டு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தக்காளி, இரண்டு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post