அவரைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

  • அவரைக்காய்
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கடுகு
  • கடலைப்பருப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‌

250 கிராம் பொடியாக நறுக்கிய அவரைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக 1/4 கப் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post